Friday, March 25, 2011

சற்றே சிறிய சிறுகதைகள்




த்துவான வெளியில்
சிலுவையென கரம் விரித்து
கண் மூடிஏதேனும் ஒரு பறவையின்
எச்சம் பட்டு புனிதப்பட
__________________________________________



நீங்க‌ள் ம‌ல‌த்தை மிதித்த‌ செருப்பினால்
என்னை அடித்துவிட்டுப் போங்க‌ள்புக‌லிட‌ம் தந்த‌..என் ஊன‌த்திர்க்கு உச்ச் கொட்டிய‌சோத்துப் பொட்ட‌ல‌த்தை த‌ரையில் வீசிய‌
விமான‌த்தில் வ‌ந்த‌
தெரு ம‌னித‌ர்க‌ளேநீங்க‌ள் ம‌ல‌த்தை மிதித்த‌ செருப்பினால்

என்னை
__________________________________________
து தூங்குவதைப்போலவே செத்துக்கிடந்ததென்றும்
அது தன் வீட்டில் வள‌ர்ந்த லஷ்மியைப் போல என‌
கண் கலங்கிசாப்பிட‌
வேலை செய்ய‌
கலைந்த தலையைக் கோதிக்கொள்ளக் கூட‌
முடியாமல் போனதாய்
யோகாவிட‌ம்
சங்க‌ரிட‌ம்
ஜோச‌பிட‌ம்
புல‌ம்பி
வீடு திரும்பி
இட‌து வ‌ல‌து தெரியாது குடித்து
ம‌னைவியோடு க‌ல‌வி கொண்டு
அடுத்த‌ நாள்
அது செத்துப்போன‌ இடத்தைக் க‌டந்து வந்த‌த‌ர்க்கே
சாப்பிட‌
வேலை செய்ய‌
த‌லை வாரிக்கொள்ள‌
முடியவில்லையென‌
யோகாவிட‌ம்
சங்க‌ரிட‌ம்

Sunday, March 20, 2011

விதிமுறைகள் வீழ்த்தப்பட்டன

ஒரு ராத்திரி
ஒரு கோடி இரவுகளாய்
கடினப்பட்டு என்னைக் கடந்தது
மெல்லமாய் விழித்துப் பார்த்தேன்
விடியல் தூங்கிக் கொண்டிருந்தது
இதயம் விதிமுறை மீறி
வலது பக்கமாய்த் துடித்தது
சுவர்க்கடிகாரம் மட்டும்
எனக்கு  துணையாய் விழ்த்திருந்தது
அனால் ஒவ்வொரு முறை
நகர்ந்தபோதும்
அதன்  நொடி முள் என்னைக் குத்தியது.
பிறந்தபோது என் தாய் கண்ட வலி
இறப்பன்று நான் காணப்போகும் வலி
ஒன்றாய் இரண்டையும் சேர்த்து
அனுபவித்துக் கொண்டிருந்தது
என் நெஞ்சம்
காலையில் சந்திக்கப் போகும்
கணக்குப்  பரிட்சையை எண்ணி...

Thursday, March 17, 2011

சற்றே சிறிய சிறுகதைகள் - 3




நான் சதுப்பு நிலத்தில் ஓடிக்கொண்டிருக்கறேன்
உன் காதல் ஒரு கருப்பு நாயைப்போல்
என்னை துரத்திக்கொண்டிருக்கிறது
செருப்பிலிருந்து உள்ளாடை வரை
உனக்குப் பிடித்த நிறமா என
யோசிக்கையில் நான் இழந்த என் சுயத்தை
வாயில் கவ்விக்கொண்டுசுயமா? நீயா?சுயமா? காதலா?யோசித்து திரும்பி நாயை வெறிக்கையில்
நான் கடவுளாகியிருந்தேன்
நாய் இப்போது ஒரு கடவுளை துரத்திக்கொண்டிருக்கிறது.

Tuesday, March 15, 2011

சற்றே சிறிய சிறுகதைகள் - 2


ந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
பின்னால் நிற்பவன்
இதயத்துக்குள்ளாக கையை நுழைத்து
தர்மசங்கடத்தை அறுத்து வெளியில் எரிந்து
மிதிக்கிறான்
எவனோ ஒருவனுடயதை
முந்தைய பந்தியில் அறுத்துப் போட்டு
உட்கார்ந்திருக்கிறேன் நான்
பசியில் காத்திருந்த நாக்கு
அடுத்தவன் வயிறு வரை நீண்டிருந்தது
எந்த ____றாண்டி சொன்னது
அத்தியாவசியம் உணவு உடை உறையுள் என?எனக்கும் என் பின்னால் நிற்பவனுக்கும்
உணவு மட்டுமே என்று படுகிறது

Thursday, March 3, 2011

சற்றே சிறிய சிறுகதைகள் - 1



சேற்றுக் குட்டையில்
சோத்துக்குக் காத்திருந்த குஞ்சு தவளைகளோ
நுறையீரல் கிழிந்து
விழி பிதுங்கி ரோட்டில் கிடந்த
அம்மா  தவளையோ
எந்த செய்தியிலும் வரப்போவதில்லை
சவங்களின் மேல்
இயங்கிக்கொண்டிருக்கப்போகிறது உலகம்.

Wednesday, February 23, 2011

ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்…

ஒரு வேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்
சிதில மடைந்த குழிகளை கொண்ட
நகரமாகமாற எத்தனிக்கும் ஒரு கிராமத்தின்
பிரதான சிறியசாலை
முதல்மழையில் நீர்த்துப் போன தொரு
இரவும் விடியலுமான வேலையில்
காலனிதாண்டி காலுறை நனைய
நடந்து போகும் சுகித்தலில்
கண்டிப்பாய் உன் நினைவு என்னுள்
நிழலாடியிருக்கும் என்று
ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்
பழகி இறந்துபோன ஒரு பூனைக் குட்டியை
கைகளில் சுமந்து கொண்டு நடக்கும் வேதனையோடுதான்
கைபேசியில் உனது அழைப்பை வெறித்தபடி
நடந்திருப்பேன் என்று….
நீ அப்போது இருந்தாய்
உன் நினைவுகளை நீர் நிரம்பி இருந்த
குழிகளில் சேகரித்திருக்கிறேன்….
அடுத்த மழைக்கு திரும்பி வரும்
ஒருவேலை கிராமசாலை நகரமாகமல் இருந்தால்
அடுத்த முதல் மழை அமில மழையாகாமல் இருந்தால்
ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்

Sunday, February 20, 2011

கிரிக்கெட்டா ? இந்தியாவா?

முறிந்த மட்டையை மாற்றிக் கொடுக்க
மூன்று பேர் ஓடி வந்தார்கள்.
பதினொருவரின் எச்சில் பட்ட பந்தில்
முகவாயில் அடி வாங்கிய முன்னணி மட்டையாளர்
அநியாயமாய் விக்கெட்டை இழந்தபின்
அழகாய் ஆடிக்காட்டினான் விளம்பரத்தில் ஒருவன்
ஆடாமல் இருந்தவனுக்கு கூட ஐந்து லட்சமாம்
ஓலைக் குடிசையில் கறுப்பு வெள்ளையில் பார்த்துவிட்டு
காலையில் ஒருவன
அனாவசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனான்
"இந்தியா அநியாயமா தோத்துப் போச்சாம்"