Wednesday, February 16, 2011

எல்லா இடத்திலும் ஒரு கவிதை




கொய்யாக்காய் விற்பவளின் கூச்சல்
பாட்டுப்பாடி பிழைப்பவர்கள்
இரயில் பெட்டிக்கே உரிய அருவருப்பு நிறம்
என் கழுத்தை இறுக்கும் டை
அலுவலக நேர நெரிசல்
புதிய தமிழ் பாடல்களை சிணுங்கும் செல் போன்கள்
பக்கத்தில் நிற்பவனின் இரண்டு நாள் வியர்வைச் சட்டை
இத்தனை நெரிசலிலும் ஆசுவசப்படுத்துகிறது 
அம்மாவின் முடியை இழுத்து
அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை......

2 comments:

  1. நல்ல ரசனை ..வாழ்த்துக்கள் ..முதல் பதிவு , கவிதைக்கு :)

    ReplyDelete
  2. //அம்மாவின் முடியை இழுத்து
    அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை//
    நல்ல ரசனை :)

    ReplyDelete