Wednesday, February 23, 2011

ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்…

ஒரு வேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்
சிதில மடைந்த குழிகளை கொண்ட
நகரமாகமாற எத்தனிக்கும் ஒரு கிராமத்தின்
பிரதான சிறியசாலை
முதல்மழையில் நீர்த்துப் போன தொரு
இரவும் விடியலுமான வேலையில்
காலனிதாண்டி காலுறை நனைய
நடந்து போகும் சுகித்தலில்
கண்டிப்பாய் உன் நினைவு என்னுள்
நிழலாடியிருக்கும் என்று
ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்
பழகி இறந்துபோன ஒரு பூனைக் குட்டியை
கைகளில் சுமந்து கொண்டு நடக்கும் வேதனையோடுதான்
கைபேசியில் உனது அழைப்பை வெறித்தபடி
நடந்திருப்பேன் என்று….
நீ அப்போது இருந்தாய்
உன் நினைவுகளை நீர் நிரம்பி இருந்த
குழிகளில் சேகரித்திருக்கிறேன்….
அடுத்த மழைக்கு திரும்பி வரும்
ஒருவேலை கிராமசாலை நகரமாகமல் இருந்தால்
அடுத்த முதல் மழை அமில மழையாகாமல் இருந்தால்
ஒருவேளை உனக்கும் தெரிந்திருக்கலாம்

No comments:

Post a Comment